மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள் 200 லிட்டர் தண்ணீரில் கோமியம் 20 லிட் ஆமணக்கு எண்ணெய் 2 லிட் மீன் அமிலம் 3 லிட் இக்கரைசல் கலந்து வைத்த பிறகு தயாராக 15 நாட்கள் ஆகும். தினசரி கலக்கி விடலாம். 10 லிட்டர் தண்ணீரில் இதிலிருந்து ஒரு லிட்டர் திரவம் எடுத்து கலந்து பயிர்களுக்கு தெளிப்பதால் வளர்ச்சியும் பூச்சி தாக்குதல் இல்லாமலும் இருக்கும். நன்றி: திரு. திண்டுக்கல் பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர்
அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் அழிவுகளை தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. *தேவையான பொருட்கள் :* 1. வேப்பிலை. -- 5 கிலோ 2.புகையிலை -- அரைகிலோ 3.பச்சை மிளகாய் -- அரைகிலோ 4. பூண்டு -- அரைகிலோ. 5. கோமியம் -- 10 லிட்டர் *செய்முறை* 1. பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். 2. புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். 3. அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். 4. கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும். 5. அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும். இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும். 6. நான்கு முறை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும். 7. இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பய...
Comments
Post a Comment